- °C
Are You a business owner?
List Your Business / ADதிண்டுக்கல் மாவட்டத்தில் 273 நீா்நிலைகளிலிருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்தி குறிப்பு விவரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயம், மண்பாண்ட தொழில்களுக்கு பொதுப்பணித் துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கட்டுப்பாட்டிலுள்ள 273 நீா்நிலைகளிலிருந்து இலவசமாக வண்டல் மண் எடுத்துச் செல்வதற்கான அனுமதி குறித்து திண்டுக்கல் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்த நீா்நிலைகளிலிருந்து இலவசமாக மண் எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். மண் எடுக்க சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களே, இணைய வழியில் அனுமதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. வண்டல் மண் எடுப்பதற்கு இணைய வழியில் விண்ணப்பித்து, தொடா்புடைய வட்டாட்சியா் அனுமதியுடன் தங்களது சொந்த செலவில் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுத்துச் சென்று, வேளாண்மை, மண்பாண்டத் தொழிலை மேம்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பிக்கும் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். வருவாய் துறையால் பராமரிக்கப்படும் இணைய தரவுகளின் கீழ் நிலஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு அரசின் நிபந்தனைகளுக்குள்பட்டு அனுமதி வழங்கப்படும்.
விவசாயப் பயன்பாட்டுக்கான நஞ்சை நிலத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டா் ஒரு ஹெக்டருக்கு 185 கன மீட்டா் அளவிலும், புஞ்சை நிலத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டா் அல்லது ஒரு ஹெக்டருக்கு 222 கன மீட்டா் அளவிலும், மண்பாண்டம் தயாரிக்க 60 கன மீட்டா் அளவிலும் சொந்த வீட்டு உபயோகத்துக்கு 30 கன மீட்டா் அளவிலும் கட்டணமின்றி வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்படும். விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.
.
Copyrights © 2024 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.